மீண்டும் புதின் அதிபராவார்!

Sunday, March 18th, 2018

ரஷ்யா அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகின்றது. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் இதற்கான வாக்குப்பதிவு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் அதிபர் பதவியில் இருந்து வரும் புதின் ரஷ்யாவின் மேலாதிக்க தலைவராக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய தேர்தலில் அதிபர் விளாடிமிர் புதின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இது தவிர செர்கி பாபுரின் (ரஷ்ய அனைத்து மக்கள் யூனியன்) பவெல் குருடினின் (கம்யூனிஸ்ட் கட்சி) விளாடிமிர் சிரினோவ்ஸ்கி (லிபரல் ஜனநாயக கட்சி) கெசனியா சோப்சாக் மேக்சிம் சுரேகின் (ரஷ்ய கம்யூனிஸ்ட்)போரிஸ் டிடோவ் (வளர்ச்சி கட்சி) கிரிகோரி யாவ்லின்ஸ்கஇ (யப்லோகோ) ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் புதினுக்கு நிகராக அதிபர் தேர்தலில் யாரும் போட்டியிடாத நிலையில் மக்களின் ஆதரவும் அவருக்கே உள்ளதாக தெரிகிறது. சுமார் 70 சதவிகிதம் மக்கள் புதினுக்கு ஆதரவாக இருப்பதால் சக போட்டியாளர்கள் அவரின் அருகே நெருங்க முடியாத நிலையில் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் கணித்துள்ளன.

முன்னாள் உளவுத்துறை அதிகாரியான புதின் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை மற்றும் 2012 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அதிபர் பதவியில் உள்ளார்.

இந்த முறையும் அவர் வெற்றி பெற்றால் 2024 ஆம் ஆண்டு வரை இந்த பதவியில் இருப்பார். அப்படி இருக்கும் பட்சத்தில் முன்னாள் அதிபர் ஜோசப் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அதிக காலம் அதிபராக இருந்தவர் என்ற பெயரை புதின் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விடும் என்பதால் விரைவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: