மீண்டும் பிரித்தானியா பாகிஸ்தானிடையே விமானசேவை ஆரம்பம்!
Wednesday, December 19th, 2018சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம் பாகிஸ்தானுக்கு மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்கவுள்ளது.
இதையடுத்து லண்டன் முதல் இஸ்லாமாபாத் வரை அந்நிறுவனத்தின் விமான சேவை மீண்டும் நடைபெறவுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த குண்டு வெடிப்பு காரணமாக 40 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களால் அந்நாட்டு விமான சேவையை பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம் நிறுத்தியது.
இது வரலாற்றுச்சிறப்புமிக்க ஒரு தொடக்கம், இதன்மூலம் வணிக ரீதியில் பெரிய மாற்றம் ஏற்படும் என பிரிட்டன் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூட்டாக தெரிவித்தனர்.
Related posts:
மியன்மார் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடையை இரத்துச் செய்தார் ஒபாமா ?
நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - மீறினால் அபராதம்!
அமெரிக்காவில் தொடரும் கொலைகள்!!
|
|