மீண்டும் பயங்கரவாத தாக்குதல் – இலண்டனில் பொதுமக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை!
Friday, September 15th, 2017இலண்டனில் இடம்பெற்ற சுரங்க ரயில் வெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என பொலிஸார் உறுதி செய்துள்ளனர். இன்று காலை நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து ரயில் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.மேற்கு லண்டனில் லண்டன் நேரப்படி இன்று காலை 8.20 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திடீரென ரயிலுக்குள் தீ பந்துகள் போன்று ஏதோ விழுந்துள்ளதாகவும், இதன்போது அதிகளவான பயணிகளின் முகங்களில் கடுமையான எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.முகத்தில் தோல் உறிந்த காயங்களுடன் பயணிகள் கத்தி கூச்சலிட்டவாறு அங்கிருந்து ஓடியுள்ளனர்.சுரங்க ரயில் பாதையில் வெடி குண்டு இருப்பதாகவும் மற்றுமொரு நபர் ஒருவர் கத்தியுடன் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக அந்தப் பகுதியில் இருந்த மக்களை பாதுகாப்பாக வெளியேறுமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
https://twitter.com/EmmaStevie1
Related posts:
|
|