மீண்டும் தென்னாப்பிரிக்கா ஜனாதிபதியானார் சிரில் ரமபோசா!

தென்னாப்பிரிக்கா நாட்டின் ஜனாதிபதியாக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்வு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்னாப்பிரிக்கா குடியரசு நாட்டின் பாராளுமன்றத்துக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதியாக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்வு செய்தனர்.
ஜனாதிபதி பதவிக்கு சிரில் ரமபோசாவை தவிர வேறு யாரும் நிறுத்தப்படாத நிலையில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சிரில் ரமபோசா வெற்றிபெற்றதாக இந்த தேர்தலை மேற்பார்வையிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மோகோயேங் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
மெக்ஸிகோவில் சீற்றத்தக்குள்ளான எரிமலை!
எம்மை அணு ஆயுத நாடாக அங்கீகரிக்க வேண்டும்- வடகொரியா!
மகாத்மா காந்தி கொலை வழக்கு : மீண்டும் ஒத்திவைப்பு!
|
|