மீண்டும்  டிரம்ப் – கிம் சந்திப்பு!

Friday, December 21st, 2018

2019ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சந்திப்பு நடைபெறும் என நம்புவதாக வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் உன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.

டிரம்ப் – கிம் சந்திப்பு சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது.

இந்நிலையில், அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் சந்திப்பு நடைபெறும் என நம்புவதாக வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

அதன்போது, இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts: