மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வட கொரியா!

Thursday, August 25th, 2016

சர்வதேச தடையை மீறி வட கொரியா மீண்டும் நீர்மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்தியுள்ளது.

இந்த ஏவுகணையை கண்காணித்த போது, சுமார் 500 கி.மீ பயணம் செய்து, `சீ ஆப் ஜப்பான்’ கடல் பரப்பில் விழுந்ததாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜப்பான், சீனா மற்றும் தென் கொரியாவை சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திக்கும் தருணத்தில் இந்த சோதனை நடந்துள்ளது.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, வட கொரியாவின் நடவடிக்கை மன்னிக்க முடியாதது என்றும் தனது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் கூறியுள்ளார். முன்னதாக , வட கொரியா, தென் கொரியாவின் தற்போதைய இராணுவ பயிற்சிகள் குறித்து எச்சரித்தது. மேலும் அமெரிக்கா, கொரிய தீபகற்பத்தை போரின் விளிம்பிற்கு தள்ளுகிறது என்றும் தெரிவித்தது.

Related posts: