மீண்டும் ஊடக அடக்குமுறை: பெண் செய்தியாளரின் தலை துண்டிப்பு!

Sunday, October 8th, 2017

சுவீடனைச் சேர்ந்த பெண் செய்தியாளர் ஒருவர் காணாமல்போனதை தொடர்ந்து அவரது துண்டிக்கப்பட்ட தலையை பொலிசார் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுவீடன் நாட்டை சேர்ந்த கிம் வால் என்ற பெண் செய்தியாளர் உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு சர்ச்சைக்குரிய செய்திகளை சேகரிப்பதில் பிரபலமானவர் ஆவார். கடந்த ஆகஸ்ட் மாதம் டென்மார்க் நாட்டிற்கு பயணமான கிம் வால் கப்பலில் பயணம் செய்தபோது காணாமல் போயுள்ளார்.

செய்தியாளரை பொலிசார் தீவிரமாக தேடி வந்துள்ளனர். ஆனால், அவர் கண்டுபிடிக்கப்படவில்லை.இந்நிலையில், படகு சவாரி சென்ற சிலர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு சென்றபோது துண்டிக்கப்பட்ட நிலையில் தலை மற்றும் கால்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவை காணாமல்போன பெண் செய்தியாளரின் தலை என உறுதி செய்யப்பட்டது.எனினும், கிம் வாலின் பிற உறுப்புகள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

உறுப்புக்களை சேகரித்த மருத்துவர்கள் அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இக்கொலை எவ்வாறு நிகழ்ந்தது என்பதும் இதுவரை தெரியவரவில்லை.கிம் வால் கொடூரமாக கொல்லப்பட்டது தொடர்பாக டென்மார்க் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.