மீண்டும் இந்தியா பாகிஸ்தான் இடையே புகையிரத சேவை!

மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே புகையிரத சேவையை நடத்த ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றமையால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்இந்தியா பாகிஸ்தான் புகையிரத சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் கடந்த 2006 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே புகையிரதசேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டு புகையிரத சேவைகள் ஆரம்பிக்கநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீண்டும் ஆரம்பமாகும் புகையிரத சேவைகள் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி வரைநடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாட்டு மக்களுக்கும் இடையே நல்லுறவு உண்டாக வாய்ப்புகள் உள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|