மீண்டும் அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து கூட்டுப் பயிற்சி!

Wednesday, March 21st, 2018

அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி மீண்டும் மிகப்பெரிய கூட்டுப் பயிற்சிகளை நடத்தவுள்ளன.

இரு நாடுகளும் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடுகின்றமைக்கு வடகொரியா தொடர்ந்தும் எதிர்ப்புகளை வெளியிட்டு வருகிறது.

வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதட்டத்துக்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

பனிக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு வடக்கு மற்றும் தென் கொரியாக்கள் இணைந்து செயற்பட்டமையால் இந்த மாதம் ஆரம்பமாகவிருந்த பயிற்சிகள்பிற்போடப்பட்டிருந்தன.

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி, வடகொரிய தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்த அண்மையில் இணக்கம் வெளியிட்டிருந்தார்.

இத்தகைய சூழ்நிலையில் குறித்த பயிற்சிக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: