மியான்மருக்கு தொடர்ந்து அழுத்தம் – பங்களாதேஷ் பிரதமர்!

Monday, February 4th, 2019

மியான்மரிலிருந்து பங்களாதேசத்துக்கு இடம்பெயர்ந்த ரோஹிங்கியா அகதிகளை திரும்ப பெற்றுக்கொள்ள மியான்மருக்கு தொடர்ந்து சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசினா கோரிக்கை விடுத்துள்ளார்.

வியாட்நாம் பிரதமரின சிறப்பு தூதவர் மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் துணை அமைச்சர் நிகுயென் குயோக் டிசங்கின் சந்தித்த பின் இக்கருத்தை பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசினா வெளியிட்டுள்ளார்.

இச்சந்திப்பு தொடர்பாக பங்களாதேஷ் பிரதமரின் ஊடக செயலாளர் இஹ்சனுல் கரிம் மேலும்சில விளக்கங்களை அளித்துள்ளார்.

“ரோஹிங்கியா மக்களை திருப்பி அனுப்ப மியான்மருடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளாது. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகின்றது,”என ஷேக் ஹசினா குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷில் 11 லட்சம் ரோஹிங்கியா அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக பங்களாதேஷ் பிரதமரை பாராட்டிய வியாட்நாம் வெளிநாட்டு விவகாரங்களின் துணை அமைச்சர் நிகுயென் குயோக் டிசங்,

“இது பங்களாதேஷூக்கு பெரிய சுமை. இவ்விவகாரத்தில் பங்களாதேஷூக்கு ஆதரவளிக்கும் விதமாக 50,000 அமெரிக்க டொலர்களை வியாட்நாம் நன்கொடை அளிக்கும்,” எனக் கூறியிருக்கிறார். மியான்மரின் ரக்ஹைன் பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை இனச்சுத்தரிகரிப்போடு ஒப்பிட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபை ‘இனச்சுத்திகரிப்பை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை வெளிப்படுத்தும் பாடப்புத்தகம் இது’ எனக் குறிப்பிட்டிருந்தது

Related posts: