மியான்மரில் மசூதி தீ வைத்து அழிப்பு!

Saturday, July 2nd, 2016

மியன்மாரில் கத்திகள், கம்புகள் மற்றும் பிற ஆயுதங்களை கொண்ட கலவரக் கும்பல் ஒன்றால் நாட்டின் வடக்கு பகுதியிலுள்ள மசூதி ஒன்று தீ வைத்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது.

காச்சின் மாநிலத்திலுள்ள ஹபாகான்ட் என்ற இடத்தில் நடைபெற்றுள்ள இந்தத் தாக்குதல், கடந்த வாரம் மியான்மரின் மத்தியப் பகுதியில் மசூதி ஒன்றிற்கு எதிராக நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து நிகழ்ந்துள்ளது.

மியான்மரில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் மத சகிப்புதன்மையற்ற நிலைமைகளை பற்றி அந்நாட்டில் பயணம் மேற்கொண்டு வரும் ஐநா மனித உரிமைகள் புலனாய்வாளர் யாங்ஹீ லீ கவலை வெளியிட்டுள்ளார்.

இத்தகைய சம்பவங்களில் முழுமையான புலனாய்வு மேற்கொள்ள வேண்டும். முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான அமைப்பு ரீதியிலானப் பாரபட்சத்தை முடிவுக்கு கொண்டுவர அவசர முன்னுரிமையோடு செயல்பட வேண்டும் என்று ஆங்சான் சூச்சி வழிநடத்தும் அரசை யாங்ஹீ லீ கேட்டு கொண்டுள்ளார்.

Related posts: