மியான்மரில் நிலநடுக்கம்!

மியான்மரின் வடமேற்கு பகுதியில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.0 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், நிலப்பரப்புக்கு கீழே 122 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை,எனினும், நிலநடுக்கம் காரணமாக அச்சம் கொண்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதேவேளை, இந்நிலநடுக்கம் இந்தியாவின் கிழக்கு மாநிலங்களிலும், பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து கொல்கத்தா நகரில் உள்ள மக்கள் கட்டடங்களை விட்டுவெளியேறியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
Related posts:
4 அமைச்சர்கள் இராஜினாமா!
குற்றவியல் பிரேரணையில் அமெரிக்கா அதிபர் வெற்றி!
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் இணக்கம் - எரிபொருள் வழங்க தயாராகும...
|
|