மியன்மாரில் புதைகுழியிலிருந்து 10 சடலங்கள் மீட்பு!

Saturday, December 23rd, 2017

மியன்மாரில் ரோஹிஞ்யா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ராக்கைன் மாகாணத்தில் கண்டறியப்பட்ட புதைகுழியிலிருந்து 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

ராக்கைன் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இண்டிண் கிராமத்தில் இந்தப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த புதைகுழியின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருவதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ராக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்யா பயங்கரவாதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இராணுவம் நடத்திய தாக்குதலில், 6,700 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச தன்னார்வ அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

Related posts: