மாஸ்கோ நகருக்கு வருமாறு  டிரம்ப்பை அழைக்கும் புடின் !

Sunday, July 29th, 2018

அண்மையில் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கி நகரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இடையே வரலாற்று சிறப்புமிக்க முதல் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிலையில், ஈரான், சிரியா உள்ளிட்ட  உலக நாடுகளின் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச தொலைபேசி அழைப்புகள் மட்டுமே போதாது என்பதால் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ நகருக்கு வருமாறு டிரம்ப்புக்கு புதின் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா தலைநகர் ஜோகனஸ்பர்க் நகருக்கு வந்துள்ள ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபருடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு வருமாறு டிரம்ப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

Related posts: