மாவட்ட இளைஞர் விளையாட்டு கபடியில் தெல்லிப்பழை வெற்றி!

Wednesday, May 30th, 2018

மாவட்ட இளைஞர் விளையாட்டு விழாவில் கபடிப் போட்டியில் தெல்லிப்பழை பிரதேச செயலக பெண்கள் அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் ஆண், பெண் இருபாலருக்குமான கபடிப் போட்டிகள் கடந்த 26 ஆம் திகதி நெல்லியடி மத்தியகல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான போட்டியில் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவு அணி சம்பியனாகவும் ஆண்களுக்கான போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

Related posts: