மால்டோவா அதிபர் தேர்தலில் ரஷ்ய ஆதரவு தலைவர் வெற்றி!

Tuesday, November 15th, 2016

மால்டோவாவில் நடந்த அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டின் சோஷலிஸ்ட் கட்சியின் ரஷ்ய ஆதரவு தலைவரான இகோர் டோடோன் அறிவித்துள்ளார்.

ஏறக்குறைய அதிபர் தேர்தலில் பதிவான அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டுள்ள நிலையில், இகோர் டோடோன் 54 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் உலக வங்கி பொருளாதார நிபுணரும் , ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளருமான அவரது எதிர்தரப்பு வேட்பாளாரான மையா சாண்டு ஊழல் எதிர்ப்பு என்ற கோஷத்தை முன் வைத்து அதிபர் தேர்தலில் போட்டியிட்டார்.தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கியவுடன், மால்டோவா மக்களை அமைதி காக்கும்படி டோடோன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் மால்டோவாஒரு வர்த்தக சங்க ஒப்பந்தத்தில் மால்டோவா கையெழுத்திட்ட பின்னர், மால்டோவா மற்றும் ரஷ்யா இடையேயான வணிக மற்றும் அரசியல் உறவுகளில் உண்டான அதிருப்தியை சரி செய்து விடுவதாக டோடோன் உறுதிமொழி அளித்தார்.

_92425855_moldova

Related posts: