மாலைத்தீவில் அவசரகால நிலையை இரத்து !

Saturday, March 24th, 2018

 மாலைத்தீவில் கடந்த 45 நாட்களாக அமுலில் இருந்த அவசரகால நிலையை திரும்ப பெறப்படுவதாக அதிபர் அப்துல்லா யாமீன் அறிவித்துள்ளார்.

மாலைத்தீவில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட 9 அரசியல் தலைவர்களை விடுதலை செய்யவும், மாலைத்தீவு முன்னேற்ற கட்சியின் 12 பாராளுமன்ற உறுப்பினர்களை அதிபர் யாமீன் அப்துல் கயூம் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று அறிவித்தும் அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவால் தனது பதவிக்கு ஆபத்து என்பதால் 15 நாட்கள் நெருக்கடி நிலையை அமுல்படுத்திய அதிபர் யாமீன் அப்துல் கயூம், தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி அப்துல்லா சயீத், நீதிபதி அலி ஹமீத் ஆகிய இருவரையும் கைது செய்தார்.

பின்னர் உயர் நீதிமன்றத்தின் எஞ்சிய நீதிபதிகள், முந்தைய உத்தரவுகளை ரத்து செய்தனர். இதனை அடுத்து, பாராளுமன்ற ஒப்புதலுடன் நெருக்கடி நிலை மேலும் 30 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

முன்னாள் அதிபர் முகமது நஷீத், நீதிபதிகள் அப்துல்லா சயீத், அலி ஹமீத் உள்ளிட்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்களை , முன்னாள் பொலிஸ் கமிஷனர் உட்பட 9 பேர் மீது அங்கு உள்ள குற்றவியல் நீதிமன்றில் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. நீதிபதிகள் அப்துல்லா சயீத், அலி ஹமீத் மற்றும் இன்னொரு நீதிபதி என 3 பேர் அரசை கவிழ்ப்பதற்காக லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 45 நாட்களாக நீடித்து வந்த அவசரகாலச்சட்டத்தினை நேற்று நீக்கிய அதிபர் அப்துல்லா யாமீன் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என அறிவித்தார்

Related posts: