மாலைதீவில் பாராளுமன்ற தேர்தல் – அதிபரின் கட்சி அமோக வெற்றி!

மாலைதீவு பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் மற்றும் தற்போதைய ஜனாதிபதி முகமது சோலி ஆகியோரின் எம்.டி.பி. கட்சி அமோக வெற்றிபெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
87 இடங்களை கொண்ட மாலைதீவு பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினார்கள்.
எம்.டி.பி. கட்சி 3-ல் 2 பங்கு இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது. அதவாது முதற்கட்ட தேர்தல் முடிவுகளின்படி மொத்தம் உள்ள 87 இடங்களில் 50 இடங்களில் எம்.டி.பி. கட்சி வேட்பாளர்கள் வெற்றிவாகை சூடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அதிபர் முகமது நஷீத் “இந்த முடிவுகள் மாலைதீவில் ஜனநாயகத்தை உறுதிப் படுத்த வழி வகுக்கும்” என கூறினார்.
Related posts:
அன்டோனியோ குட்டெரெஸ் அடுத்த ஐ.நா.பொதுச் செயலர்?
சீனாவைில் கைதான கனேடிய தம்பதிகள் விடுதலை!
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரின் சொத்துக்களை முடக்குமாறு பரிந்துரை!
|
|