மாலி தாக்குதலில் 3 படையினர் பலி!

மாலியில் உள்ள போனியின் மத்திய நகரில் நடைபெற்ற திடீர் தாக்குதலில் மூன்று படையினர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாத தொடக்கத்தில், போனியில் உள்ள மத்திய நகரை ஜிஹாதிகள் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இருவர் காயம் அடைந்துள்ளனர். மாலியின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில், ஐ.நாவின் அமைதி படையினரின் இருப்பு உள்ள போதும் இஸ்லாமியவாத குழுக்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
2012 ஆம் ஆண்டில், மாலியின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை பிரிவினைவாதிகள் மற்றும் ஜிஹாதிகள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீன துணை குடியரசு தலைவர் - இந்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு!
கடன் மறுசீரமைப்புக்கு சீனா இணக்கம் - சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அறிவிப்பு!
இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழக்கத் தொடங்கியுள்ளது - அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவிப்பு!
|
|