மார்க் ஸுக்கர்பெர்க்கின் பாதுகாப்பிற்காக கடந்த வருடம் 7.3 மில்லியன் அமெரிக்க டொலர் !

Wednesday, April 18th, 2018

200 கோடி பேருக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் சமூக ஊடகமான ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க்கின் பாதுகாப்பிற்காக கடந்த வருடம் 7.3 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.

அதேபோல் , அவரது தனிப்பட்ட விமானத்திற்காக 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடந்த வருடம் செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது , கடந்த 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நூற்றுக்கு 54 சதவீத அதிகரிப்பாகும். இந்த வருடம் பாவனையாளர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்கிடம் அமெரிக்க காங்கிரஸ் சபை பத்து மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: