மாநகர முதல்வரொருவர் பிலிப்பைன்ஸஸில் சுட்டுக்கொலை !

Tuesday, August 1st, 2017

பிலிப்பைன்ஸில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புள்ளவராக அந்த நாட்டு ஜனாதிபதியினால் குற்றம் சுமத்தப்பட்டிருந்த, மாநகர முதல்வர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்

பிடியாணை உத்தரவொன்றின் அடிப்படையில் குறித்த மாநகர முதல்வருக்கு எதிரான நடவடிக்கையின் போது அவரும் அவருடைய மனைவி மற்றும் மெய்ப்பாதுகாவலர்கள் உட்பட்ட 10 பேரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒஸாமிஸ் மின்டானோ நகர முதல்வாரன ரெனால்டோ பரோஜினொக் என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்

பிலிப்பைன்ஸின் ஜனாதிபதி ரொட்ரிக்கோ டட்டர்ட் போதைப்பொருளுக்கு எதிரான யுத்தத்தை 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பித்த பின்னர் இதுவரை 7 ஆயிரம் பேர்வரை கொல்லப்பட்டுள்ளார்கள்

இந்த நிலையில், ரெனால்டோ உட்பட்டவர்கள் கொல்லப்பட்டபோது அவர்களுடன் இருந்த நகரத்தின் பிரதி முதல்வரான அவரின் மகள் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அவர் மீதும் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

Related posts: