மாணவர்களுக்கு ஸ்மார்ட் சீருடை அறிமுகம்!

Thursday, January 3rd, 2019

இன்று மனிதனை சூழவுள்ள அனைத்தும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்திற்கு மாறிவருகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக மற்றுமொரு முயற்சியும் விளங்குகின்றது.

சீனாவிலுள்ள பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் சீருடைகள் வழங்கப்படுகின்றன.

மாணவர்கள் இருக்கும் இடங்களை இலகுவாக கண்டறிவதற்காகவே இவ்வாறு ஸ்மார்ட் தொழில்நுட்பம் கொண்ட சீருடைகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளத.

Guizhou Guanyu எனும் தொழில்நுட்ப நிறுவனமே இவற்றினை வடிவமைத்துள்ளது.

150 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை தாக்குப்பிடிக்கும் இந்த சீருடைகள் சலவை செய்யக்கூடியதாகவும் இருக்கின்றன.

இவற்றினை சுமார் 500 தடைவைகள் வரை சலவை செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

தற்போது Guizhou மாகாணத்திலுள்ள 10 பாடசாலைகளில் இச் சீருடைகள் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: