மல்லையா விவகாரம்:  12% வட்டியுடன் 9,853 கோடி வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு!

Sunday, February 18th, 2018

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவிடம் இருந்து ரூபா 6,203 கோடியை 12% வட்டியுடன் சேர்த்து வசூலித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கலாம் என இங்கிலாந்து நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அத்துடன் விஜய் மல்லையாவின் 10,210 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்க இலண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளிடம் ரூபா 9,௦௦௦ கோடி கடன்களை வாங்கி விட்டு திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்றுள்ளார். இந்நிலையில் அவரை நாடு கடத்திக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசின் முறையீட்டின் மீது லண்டன் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகின்றது.

இதற்கிடையே பெங்களூரில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் 13 வங்கிகளின் கூட்டமைப்பு வழக்கு தொடுத்தது. அதை விசாரித்த தீர்ப்பாயம் விஜய் மல்லையாவிடம் இருந்து ரூபா 6,203 கோடியை 12 % வட்டியுடன் சேர்த்து ரூபா 9,853 கோடியை வசூலித்து கொள்ள நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டது. இதனை இங்கிலாந்து நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

எனவே பிரிட்டன் அரசு விதிகளின்படி அவரது வாழ்க்கைச் செலவுக்காக நீதிமன்றம் நிதி ஒதுக்குவது வழக்கம். அதன்படி மல்லையாவின் ஒரு வார செலவுக்காக ரூபா 4.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தனது வாழ்க்கைச் செலவுகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மல்லையாவின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அவரது ஒரு வார வாழ்க்கைச் செலவை சுமார் மூன்று மடங்கு அதிகரித்து ரூபா 16 லட்சமாக அறிவித்துள்ளது.

Related posts: