மலேஷிய முன்னாள் பிரதமர் வீட்டில் ரூ.204 கோடி பறிமுதல்!

Sunday, May 27th, 2018

மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் வீட்டில் நடந்த சோதனையில், 204 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தென் கிழக்கு ஆசிய நாடான, மலேஷியாவில், பார்லிமென்ட் தேர்தல், சமீபத்தில் நடந்தது. இதில், மஹாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றது. இங்கு, 60 ஆண்டுகளுக்கு பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான வழக்குகளில், தற்போதைய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

மலேஷிய மேம்பாட்டு நிறுவனம் மூலம், பல கோடி ரூபாய் மோசடியில், நஜீப் ஈடுபட்டதாக, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. அவர், நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டது.சமீபத்தில், பண மோசடி வழக்கு தொடர்பாக, நஜீப் ரசாக்கின் வீடு, அவருக்கு சொந்தமான அலுவலகம் உள்ளிட்ட ஐந்து இடங்களில், போலீசார், விடிய விடிய சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இது குறித்து, மலேஷிய போலீசார் கூறியதாவது:நஜீப் ரசாக் வீடு, அலுவலகங்களில் நடந்த சோதனையில், விலை உயர்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், அவரது சொகுசு பங்களாவில், 35 மூட்டைகளில் இருந்து, 204 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.விலை உயர்ந்த கடிகாரங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts: