மலேசிய விமான விபத்தில் மகனை இழந்தவரை கட்டியணைத்து ஆறுதல் கூறிய பிரதமர்!

Sunday, May 15th, 2016

அவுஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் தனது தேர்தல் பிரசாரத்தின் போது மலேசிய விமான விபத்தில் மகனை இழந்தவரை கட்டியணைத்து ஆறுதல் கூறியது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மால்கம் டர்ன்புல் நேற்று தனது 6வது நாள் பிரசாரத்தை சிட்னியில் தொடங்கினார். அப்போது Serg Oreshkin என்பவர் பிரதமர் மால்கம் டர்ன்புலிடம் தனது கதையை கூறிய பிறகு மனமுடைந்து போன மால்கம் டர்ன்புல் அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.

MH17 மலேசிய விமான விபத்தில் Serg Oreshkin தனது மகன் விக்டரை இழந்ததாக அவர் பிரதமரிடம் தெரிவித்தார்.

மேலும், மறக்க முடியாத நிகழ்வாக இருந்த அந்த சம்பவத்தை மறந்துவிடாமல் இருக்க பணம் கொடுக்கவும் தயாராக இருப்பதாக கூறினார். இதனால் நொந்து போன மால்கம் டர்ன்புல் அந்த நபரை கட்டித்தழுவி ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வு பார்வையாளர்கள் மற்றும் அரசியல் பேச்சாளர்கள் என அனைவரையும் நெகிழ்ச்சியடைச் செய்துள்ளது


மேற்குலகநாடுகளில் செயற்படுவதற்கான இரகசிய இராணுவங்களை புட்டின் உருவாக்கி வருகின்றார்.
பாரிய புதைக்குழி ஒன்று கண்டுப்பிடிப்பு!
கரிபியன் கடலில் 7.6 ரிக்டர் அளவில் பாரிய நில நடுக்கம்!
எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே ஜெயலலிதாவிற்கு உருவச் சிலை !
காபுல் தற்கொலை குண்டு தாக்குதல்: ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு!