மலேசிய விடுதியில் குண்டு வீச்சு- 8 பேர் காயம்

மலேசியாவின் பூச்சோங் பகுதியிலுள்ள மதுபான விடுதியின் மீது நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கை குண்டு தாக்குதலில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரின் புறநகர் பகுதியான பூச்சோங் பகுதியில் மூவிடா மதுபான விடுதியில் ஏராளமானோர் மது அருந்தியபடி, கால்பந்து விளையாட்டு போட்டியின் நேரடி ஒளிபரப்பை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென மதுபான விடுதிக்குள் கை குண்டுகளை வீசினர்.
இந்த குண்டுவெடிப்பில் சீன நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
குண்டு வீச்சுக்கான காரணம் குறித்து காரணங்கள் இன்னும் தெரியவரவில்லை. தொழில் ரீதியிலான விரோதத்தில் பழிவாங்கவோ அல்லது குறிப்பிட்ட சிலரை கொலை செய்யும் நோக்கிலோ குண்டு வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கிப்பதாக செய்திகள் தெரிவித்துள்ளன.
Related posts:
|
|