மலேசிய பாடசாலையில் தீ விபத்து – 25 பேர் பலி!

Thursday, September 14th, 2017

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 25 பேர் உயிரிழந்தள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Jalan Datuk Keramat பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 23 பேர் மாணவர்கள் எனவும் இரண்டு பேர் ஆசிரியர்கள் எனவும் தீயணைப்பு திணைக்கள இயக்குனர் Khirudin Drahman .உயிரிழந்தவர்களின் வயது என்ன என்பது இன்னமும் தெளிவாகவில்லை என சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.விபத்து இடம்பெற்றதற்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது

Related posts: