மலேசியா நாட்டின் மன்னர் பதவி இராஜினாமா!

Monday, January 7th, 2019

ரஷ்யா நாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கிசுகிசுக்கப்பட்ட மலேசியா நாட்டின் மன்னர் ஐந்தாம் முஹம்மது இன்று(07) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மலேசியா மன்னராக பதவியேற்ற சுல்தான் முஹம்மது ‘மன்னர் ஐந்தாம் முஹம்மது’ என அந்நாட்டவர்களால் குறிப்பிடப்படுகிறார்.

உடல் நலக் குறைவுக்காக சிகிச்சை மேற்கொள்ளப் போவதாக கூறி கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மன்னர் விடுப்பு எடுத்திருந்தார். அதன் பின்னர், ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் ‘மாஸ்கோ அழகி’ பட்டம் பெற்ற இரு பெண்ணை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின.

Related posts: