மலேசியாவில் 9 லட்சம் லீற்றர் டீசல் கொண்டு சென்ற கப்பல் கடத்தப்பட்டது!

Wednesday, August 17th, 2016

மலேசியாவில் 9 லட்சம் லீற்றர் டீசலை சுமந்துநின்ற கப்பல் கடத்தப்பட்டது என்று அந்நாட்டு கடல்வழி போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

மலேசிய கடல்சார் துறையினர் கடத்தப்பட்ட கப்பலானது இந்தோனேஷியா கடற்பரப்பில் நிற்பதாக தெரிவித்துள்ளது.

900,000 லீற்றர் டீசலை சுமந்துநின்ற ஓயில் டேங்கர் கடத்தப்பட்டுள்ளத என்றும் அது இந்தோனேஷியா கடற்பரப்பிற்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் கூறிஉள்ளனர். மலேசிய அதிகாரிகள் வெளியிட்டு உள்ள அறிக்கையில் வீர் ஹர்மோனி கப்பல் இந்தோனேஷியாவின் பாதாம் கடற்பரப்பில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கப்பலை கடத்தியவர்  யார் என்பதை அதிகாரிகள் உறுதிசெய்யவில்லை.

கப்பலானது கடந்த திங்கள்கிழமை மலேசியாவின் தஞ்சோங் பெலிபாஸ் துறைமுகத்தில் டீசலுடன் நிறுத்தப்பட்டு இருந்தது என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related posts: