மலபார் போர்ப் பயிற்சி: இந்திய-அமெரிக்க கப்பல்கள் இணைந்து ஒத்திகை!

Friday, November 20th, 2020

மலாபார் கடற்போர் பயிற்சி இந்தியா, அமெரிக்கா போர்க் கப்பல்களை மையப்படுத்தி இன்று நடைபெற்றது.

அரபிக்கடலில் நடைபெற்றுவரும் நான்கு நாட்கள் பயிற்சியின் மூன்றாவது நாளான இன்று இந்திய விமானம் தாங்கிக் கப்பலான விக்கிரமாதித்யாவுடன் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலான நிமிட்ஸ் இணைந்து கொண்டது.

இந்த இரு கப்பல்களையும் மையப்படுத்தி, இந்தியா, ஜப்பான், அவுஸ்ரேலியா கடற்படைக் கப்பல்களும், போர் விமானங்களும் ஒத்திகையில் ஈடுபட்டன.

இதன்படி, முழு அளவிலான போர்ப் பயிற்சியில் நான்கு நாடுகளின் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

Related posts: