மலபார் கூட்டு பாதுகாப்பு பயிற்சி நடவடிக்கை!
Thursday, July 13th, 2017சீனாவுக்கு சவால் விடுக்கும் வகையில், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து முன்னெடுக்கும் 2017 மலபார் கூட்டு பாதுகாப்பு பயிற்சி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
1992ம் ஆண்டு முதல் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இடம்பெற்று வரும் இந்த பயிற்சிகளில் இந்த முறை ஜப்பானும் இணைந்துள்ளது. இந்து சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கி வருவதாக இந்தியா கருதுகிறது. இந்த நிலையில் சீனாவின் செல்வாக்கிற்கு சவால் விடுவிக்கும் வகையில் இந்தியா இந்தமுறை குறித்த பயிற்சி நடவடிக்கைகளை விரிவுப்படுத்தி இருப்பதாக பாதுகாப்பு விமர்சன இணையத்தளங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதேநேரம் தென்சீனக் கடலை முழுமையாக சீனா உரிமைக் கோரி வருகிறது. இந்த விடயத்தில் கரிசனைக் கொண்டுள்ள அமெரிக்காவும், ஜப்பானும் இந்த பயிற்சிகளில் இந்தியாவுடன் கூட்டிணைந்துள்ளமை, சீனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
|
|