மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமல்ல – வேறு ஏதேனும் குழு தாக்குதல் நடத்தியிருக்கலாம்” என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவிப்பு!
Thursday, October 19th, 2023ஹமாஸுடனான போரில் இஸ்ரேலுக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதற்காக அந்த நாட்டுக்குச் சென்றிருந்த ஜேர்மனி பிரதமா் ஒலாஃப் ஷால்ஸ், ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக விமான நிலைய தரையில் படுக்கவைக்கப்பட்டுள்ளார்..
செவ்வாய்க்கிழமை இரவு அவா் நாடு திரும்புவதற்காக விமானத்தில் ஏறியபோது இஸ்ரேலுக்குள் ஹமாஸ் அமைப்பினா் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினா். அதையடுத்து விமான நிலையம் அருகே எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.
உடனே விமானத்திலிருந்து ஷால்ஸையும், அவருடன் வந்திருந்தவா்களையும் பாதுகாப்பாக வெளியேற்றிய பாதுகாலா்கள், பாதுகாப்புக்காக அவரை தரையில் படுக்கச் செய்தனா். சில நிமிஷங்களுக்குப் பிறகு அவா் விமானத்தில் ஏறி ஜொ்மனி புறப்பட்டு;ளளார்.
இதேவேளை “காஸாவில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமல்ல; வேறு ஏதேனும் குழு தாக்குதல் நடத்தியிருக்கலாம்” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் போரை அடுத்து, இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவுக்கு நேற்று சென்றிருந்தார்.
அவருக்கு விமான நிலையம் சென்று இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்பு அளித்தார். இதன்பின் இரு தலைவர்களும் போர் தொடர்பாக ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய ஜோ பைடன், “காசா மருத்துவமனை மீதான தாக்குதலால் நான் மிகுந்த வேதனையும், அதேநேரம் கோபமும் அடைந்துள்ளேன். நான் பார்த்தவரையில் மருத்துவமனை தாக்குதலை இஸ்ரேல் செய்யவில்லை. மாறாக, வேறொரு குழு இதை செய்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
ஹமாஸ் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும். ஐஎஸ் இயக்கத்தை விட ஹமாஸ் மோசமானது. ஹமாஸ் தாக்குதலில் 30 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர். பலஸ்தீன மக்களை ஹமாஸ் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அவர்களுக்கு துன்பத்தை மட்டுமே அளிக்கிறது. இஸ்ரேலுக்கு வந்துள்ளதை பெருமையாக கருதுகிறேன். இஸ்ரேல் மக்களுக்கு சொல்ல விரும்புவது, உங்களின் தைரியம், அர்ப்பணிப்பு, துணிச்சல் என்னை பிரமிக்க வைக்கிறது. அமெரிக்கர்கள் உங்களுடன் இருப்பார்கள்” எனக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|