மன்னிப்பு கோரிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன்!

Wednesday, April 20th, 2022

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்த விவகாரம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் மன்னிப்பு கோரியுள்ளார்.

நேற்று(19) நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் போரிஸ் ஜோன்சன்(Boris Jhonson), முழு மனதுடன் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.

விதிமுறைகளை மீறுவதாக அந்நேரத்தில் தாம் எண்ணவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், பிரதமர் மன்னிப்பு கோரியமையானது நகைப்புக்குரியது எனவும் கட்டுப்பாட்டுகளை மீறியதால், அவர் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் நிதி அமைச்சர் ரிஷி சுனக் (Rishi Sunak) ஆகியோர் மீது அபராதம் விதிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

000

Related posts: