மனுஸ் தீவு அகதி  முகாம் : முக்கிய தீர்ப்பு வெளியானது!

Tuesday, November 7th, 2017

சர்ச்சைக்குரிய மனுஸ் தீவு அகதி முகாமிற்கான அடிப்படை வசதிகளை மீளவும் வழங்க முடியாது என்று பப்புவா நியுகினி நீதிமன்றம் அறிவித்துள்ளது

குறித்த முகாம் கடந்த வாரம்முதல் மூடப்பட்டநிலையில், அதற்கான மின்சாரம், நீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்த நிலையில் அங்குள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 600 அகதிகள் வரையில் நிர்கதியாகியுள்ளனர்.

அவர்களை பப்புவா நியுகினி மறறும் லோரெங்கோ ஆகிய முகாம்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போதும், அது அகதிகளின் உரிமை மீறலாக பார்க்கப்படுகிறது

படகுகள் மூலம் அவுஸ்திரேலிய சென்ற அகதிகள் விசாரணைகளுக்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்

இந்த நிலையில் குறித்த முகாமிற்கு மீண்டும் அடிப்படை வசதிகளை வழங்குமாற கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதனை பப்புவா நியுகினி நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தற்போது அங்குள்ள அகதிகள், நிலத்தை தோண்டி நீரைப் பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Related posts: