மனித கழிவுகளை வெளியேற்றும் விமானங்களுக்கு 50,000 ரூபாய் அபராதம்!

இந்தியாவில் விமானங்களிலிருந்து மனித கழிவுகளை காற்றில் வீசும் விமான நிறுவனங்களுக்கு, 50,000 ரூபாய்அபராதம் விதிக்கப்படும் என ஒரு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விமானங்கள் அதன் கழிவுகளை கொட்டுவதாக மனுதாரர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
விமானங்களில் உள்ள கழிவறைகள் சிறப்பு தொட்டிகள் மூலம் மனித கழிவுகளை சேகரிக்கும்.
பொதுவாக விமானங்கள் தரையிறங்கியதும் கழிவுகள் அகற்றப்படும்; ஆனால், நடுவானில் கழிவறைகளில் உள்ள கழிவுகள் கசிய வாய்ப்புள்ளதாகவும் சர்வதேச விமானப் போக்குவரத்து அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
வானில் பறக்கும் போதும் அல்லது விமான நிலையத்திற்கு அருகிலும் விமானங்கள் கழிவுகளை வெளியிட கூடாது என்பதை விமான போக்குவரத்து ஒழுங்கு அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
Related posts:
ஊழலுக்கு ‘பேராசைபிடித்த மனைவிகளே காரணம்’ என்கிறார் இந்தோனீஷிய அமைச்சர்
பெல்ஜியம் பிரதமர் இராஜினாமா!
வெள்ளம் - இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 114 ஆக அதிகரிப்பு!
|
|