மனநல மருத்துவமனையில் பாரிய தீ – உடல் கருகி 6 பேர் பலி!

Thursday, June 13th, 2019

உக்ரைனில் மனநல மருத்துவமனையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி 6 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

2-ம் உலகப்போர் மற்றும் ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்று மனரீதியில் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை மாலை இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் சிக்கி 6 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதுடன், மருத்துவமனையில் இருந்த 10-க்கும் மேற்பட்டோர் காயங்கள் இன்றி மீட்கப்பட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை என்பதுடன் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: