மத்திய கிழக்கில் முறுகல்: துருக்கிக்கான இஸ்ரேலிய தூதரை வெளியேறுமாறு உத்தரவு!

Friday, May 18th, 2018

இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம் ஜெருசலேமில் திறக்கப்பட்டமையைக் கண்டித்தும் காசாவில் பலஸ்தீனர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் துருக்கிக்கான இஸ்ரேலியத் தூதரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார் துருக்கி அதிபர் எர்டகன்.

ஜெருசலேம் பலஸ்தீனத்துக்கு உரியது என்பதில் விடாப்பிடியாக உள்ள நாடு துருக்கி. கடந்த பல தசாப்தங்களாக அந்த நாடு இந்தக் கருத்தை மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்து வருகிறது. இவ்வாறிருக்க அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான தூதரகம் ஜெருசலேமில் திறக்கப்பட்டமைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த துருக்கி தனக்கான இஸ்ரேலின் தூதரை நாட்டை விட்டு வெளியேற்றியது. பதிலுக்கு இஸ்ரேலும் தனக்கான துருக்கியின் தூதரை வெளியேற்றியது.

அமெரிக்கா அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்கு ஆதரவளித்து மனித குலத்திற்கு எதிரான இந்தக் குற்றத்தில் பங்கெடுத்துக் கொண்டது. அமெரிக்காவும் இஸ்ரேலும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு கூட்டாளிகளாக உள்ளன என்று துருக்கியத் தலைமை அமைச்சர் பினாலி திரிம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: