மத்திய ஆபிரிக்காவில் வன்முறை: ஐ.நா. படைகள் விரைவு!

Monday, September 19th, 2016

மத்திய ஆபிரிக்க குடியரசில் உள்ள ஐ.நாவின் அமைதி சேவையகம், போராளிகளால் 20 பேர் படுகொலை கொலை செய்த பகுதிக்கு தனது படைகளை அனுப்பியுள்ளது.

எண்டிடீட் என்னும் கிராமம் மற்றும் காகா பண்டுரு என்னும் நகரம் ஆகியவற்றில் தனது படைகள் நுழைந்துள்ளன என ஐ.நா., தெரிவித்துள்ளது.சமீப மாதங்களில் நாட்டில் நடந்த இந்த கொடுமையான தாக்குதலுக்கு ஐ.நா., கண்டனம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் முஸ்லிம்களை சேர்ந்த முன்னாள் செலக்கா போராளிகளுக்கும் அவர்களின் முக்கிய எதிரியான பலாக்காவிற்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த கிறித்துவ போராளிகளுக்கும் மோதல்கள் தொடங்கியதில் வெள்ளிக்கிழமையன்று இந்த வன்முறை வெடித்தது.

முன்னாள் செலக்கா போராளிகள், வீடு வீடாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களை கொன்றனர் என அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

_91288874__91286723_mediaitem91286720

Related posts: