மண்சரிவில் சிக்கி சியராலி யோனில் 300 பேர் பலி!

சியராலி யோனில் (sierra leone) இடம்பெற்ற மண்சரிவில் சுமார் 300 பேரளவில் உயிரிழந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
சியராலியோன் தலைநகர் ஃப்ரீடௌன் (Freetown) பகுதியில் இந்த மண்சரிவு நேற்று இடம்பெற்றுள்ளதுஅங்கு பெய்துவரும் அடை மழை காரணமாக இந்த மண்சரிவு ஏற்பட்டதாகவும், அதில் பல வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.இந்த நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
லிபியா புகைப்படக்கலைஞர் சுட்டுக்கொலை!
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விரைவில் விலகல்: நாடாளுமன்றம் ஒப்புதல்!
இளவரசி டயானா தொடர்பில் தாயார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
|
|