மணிலாவில் பாதுகாப்பு இரட்டிப்பு!

Saturday, August 5th, 2017

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் 50 ஆவது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்றவரும் நிலையில், அங்கு பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று வரும் மேற்படி கூட்டத்தில் பங்கேற்கும் பொருட்டு சுமார் 27 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் மணிலாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த கூட்டம் நடைபெற்று வரும் பகுதி மற்றும் பிரதிநிதிகள் தங்கும் ஹோட்டல்கள் அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதோடு சுமார் 13,000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதிக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த உயர் அதிகாரி ஒருவர், ‘வருகை தந்துள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்;டு பொலிஸார் பலர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறித்த நடவடிக்கைக்கு பிலிப்பைன்ஸ் இராணுவத்தினரும் பெரும் உதவி புரிகின்றனர்’ என தெரிவித்தார்.

Related posts: