மணிப்பூரில் நிலச்சரிவு : 09 பேர் பலி

201807111004114899_1_landslide2._L_styvpf Wednesday, July 11th, 2018

மணிப்பூரின் தாமங்லாங் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் முதல் மழை பெய்து வருகிறது. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவினால் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, பேரழிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தாமங்லாங் மாவட்டம் நியூ சேலம் கிராமத்தில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு9 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.