மடகாஸ்கரில் கப்பல் மூழ்கியது – 60 பேர் மாயம் : 17 பேர் பலி!

Tuesday, December 21st, 2021

மடகாஸ்கர் கடற்கரை அருகே சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகே 130 பயணிகளுடன் புறப்பட்ட கப்பல் சிறிது நேரத்தில் தீடிரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கப்பலில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் காணாமல் போயினர்.

இது சரக்குகளை கொண்டுசெல்லக்கூடிய கப்பல் என்றும், அதில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்றதாகவும் துறைமுக அதிகார தலைவர் ஜீன் எட்மண்ட் தெரிவித்துள்ளார்.

மற்றொரு துறைமுக அதிகாரியான அட்ரியன் பேப்ரைஸ் கூறுகையில், கப்பலில் எதிர்பாராதவிதமாக தண்ணீர் உள்ளே புகுந்ததன் காரணமாக கவிழ்ந்து இருக்கலாம் என்று அவர் கூறினார்.

இந்நிலையில், கப்பலில் இருந்த 130 பயணிகளில் 45 பேர் மீட்கப்பட்டதாகவும், உள்ளூர் தன்னார்வலர்களின் உதவியுடன் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக  மீட்புக்குழு தெரிவித்துள்ளது.

Related posts: