மக்காவில் தற்கொலைப்படை தாக்குதல்!

சவூதி அரேபியாவில் உள்ள மக்கா நகரமானது இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாக கருதப்படுகிறது. இங்கு ரம்லான் மாதம் என்பதால் தற்போது அங்கு இலட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று பிற்பகலில் அங்குள்ள மசூதியில் ஏராளமானோர் வழிபாடு நடத்தி கொண்டிருந்த வேளை வெளியில் கடும் பாதுகாப்பு இருந்தும் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளுடன் உள்ளே நுழைய முயற்சித்தள்ளனர்.
இதனையறிந்த பொலிஸார் தாக்குதல்களை நடாத்திய வேளை தீவிரவாதி குண்டுகளை வெடிக்க வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்பால் அங்கிருந்த ஒரு கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் யாத்ரீகர்களும் காயமடைந்துள்ளனர். தற்பொழுது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் இந்த தாக்குதல் தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related posts:
இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்!
பொருளாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: மிரட்டும் ட்டிரம்ப்!
உக்ரைன் போராட்ட களத்தில் அமெரிக்காவும் ஈடுபட வேண்டிய நெருக்கடி நிலை - மூன்றாம் உலக போருக்கு வழி வகுக...
|
|