மக்கள் வழங்கிய தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம் – ராகுல் காந்தி

Saturday, May 21st, 2016

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்வதாகவும், வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதி இருக்கிறார்.

இந்த சந்தர்ப்பத்தில், காங்கிரஸ் வெற்றிக்காக பாடுபட்ட தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், மக்களின் நம்பிக்கையை பெறும் வரை நாங்கள் தொடர்ந்து கடுமையாக பாடுபடுவோம் என்றும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

5 மாநில தேர்தல் முடிவு ஏமாற்றம் அளித்த போதிலும், இது எதிர்பாராத முடிவு அல்ல என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி கூறி இருக்கிறார். அசாம் மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பி இருப்பதாகவும், கேரளாவில் தேர்தலுக்கு தேர்தல் ஆட்சி மாற்றம் நடைபெறுவது வழக்கம்தான் என்றும் அவர் கூறி உள்ளார்.

Related posts: