மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் !

மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று இணைந்தார். மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் கூட்டணி தொடர்பாக, விஜயகாந்தை சந்திப்பதற்கு முன்பு மக்கள் நலக் கூட்டணி தலைவர் அண்ணாநகரில் உள்ள வைகோ இல்லத்தில் கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ தேமுதிக அழைப்பின் பேரில் விஜயகாந்தை சந்திப்பதாகத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய திருமாவளவன், தேமுதிக உடன் இன்று தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசுவதற்காக இன்று காலை 10 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி, தொகுதி உடன்பாடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தேமுதிக 124 தொகுதிகளிலும், மக்கள் நலக்கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது
Related posts:
|
|