மக்கள் அமைதியான முறையில் போராடுவதற்கான உரிமைக்கு ஆதரவளித்திடுவோம்- ஐ.நா. சபை!

மக்கள் தங்களது விவகாரங்களை தீர்க்க அமைதியான முறையில் போராடுவதற்கான உரிமைக்கு ஆதரவு வழங்குவோம்என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதியான புர்ஹான் வானி கொல்லப்பட்டதை அடுத்து எழுந்த வன்முறையில் பலர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து பல நாட்களாக பதற்றம் நிறைந்து அப்பகுதி காணப்பட்டது.
இந்நிலையில், காஷ்மீர் வன்முறை விவகாரத்தில் தேவையான எதனையும் செய்யாததற்காக ஐ.நா. பொது செயலாளர் பான் கி-மூனுக்கு தங்களது வளையல்களை வழங்க பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான முசாபர்பாத்தில் வசிக்கும் பெண்கள் முன்வந்தனர் என செய்திகள் வெளியானது.
இது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பானின் செய்தி தொடர்பாளர் ஸ்டெபானி டுஜாரிக், தங்களது விவகாரங்களில் தீர்வு ஏற்படுவதற்கான கருத்தினை முன்வைத்து அமைதியுடன் போராடுவதற்கான ஒவ்வொருவரது உரிமைக்கும் நாங்கள் முழுமையாக ஆதரவு அளிக்கின்றோம் என்று கூறினார்.காஷ்மீர் வன்முறையை உற்று நோக்கி வருகிறேன் என கூறியுள்ள பான், அடுத்து வன்முறை ஏற்படுவதனை தவிர்க்க அனைத்து கட்சிகளும் பதற்றத்தினை கட்டுக்குள் கொண்டு வர முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளதுடன், அனைத்து விவகாரங்களும் அமைதியான முறையில் தீர்வு காணப்படும் என தனது நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|