மக்களை வெளியேற்றும் பணி மீண்டும் ஆரம்பம்!

Tuesday, December 20th, 2016

சிரியா நகரான அலெப்போவின் கிழக்கு பகுதியில், கிளர்ச்சியாளார்களின் பிடியில் சிக்கியுள்ள பகுதிகளில் இருக்கும் மக்களை மீட்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 350 பேருடன் ஐந்து பேருந்துகள் மற்றும் ஓர் அவசர ஊர்தி புறப்பட தயாராக உள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அலெப்போவின் மேற்கு பகுதியில், கிளர்ச்சியாளர்களால் முற்றுகையிடப்பட்ட அரசப் பிடியில் இருக்கும் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்ற சென்ற பிற பேருந்துகள் மீது அடுத்தடுத்து நடத்தப்பட்ட ஆயுத தாக்குதலால் மக்களை வெளியேற்றும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

கிழக்கு அலெப்போவில் மக்களை வெளியேற்றும் பணியை ஐ.நா., குழு கண்காணிக்க அனுமதிக்கும் தீர்மானம் மீது ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் இன்று வாக்களிக்க உள்ளது. முன்னதாக பல தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது இயற்றப்பட்டுள்ள தீர்மான வாசகங்கள் குறித்து மகிழ்ச்சியடைவதாக ரஷியா தெரிவித்துள்ளது.

_93023133_gettyimages-630074930

Related posts: