மகனைக் கொன்றவரை மன்னித்தருளிய தந்தை – அமெரிக்காவில் உருக்கம்!

son_2017_11_11 Tuesday, November 14th, 2017

அமெரிக்காவில் தந்தை ஒருவர், தன் மகனைக் கொன்ற வழக்கில் 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற குற்றவாளியை கட்டிப் பிடித்து ஆறுதல் கூறிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2015 ஆம் ஆண்டு, சலாவுதின் ஜித்மவுத் (22) என்ற இளைஞர் பிசா டெலிவரி செய்து விட்டு வரும்போது வழிப்பறிக் கும்பலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் ரெல்பேர்ட் என்பவர்தான் முக்கிய குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு அவருக்கு 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை விதிக்கப்பட்ட நாளன்று சலாவூதினின் தந்தை அப்துல் முனிம் சோபத்தும் நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் உரையாற்றுகையில், “ரெல்பேர்ட் நான் உன்னை மன்னிக்கிறேன். ஏனக்கு உன் மீது கோபம் கிடையாது. ஊன்னைத் தவறாக வழி நடத்திய இந்தக் கொடுரமான குற்றத்தை செய்யத் தூண்டிய அந்தத் தீய சக்தியின் மீதுதான் எனக்குக் கோபம்” என்றார்.

தொடர்ந்து அவரது இருக்கையிலிருந்து எழுந்து நீதிபதியின் அனுமதியோடு ரெல்போர்ட்டை கட்டிப்பிடித்து அவருக்கு ஆறதல் கூறினார். இந்தக் காட்சியை கண்ட நீதிபதி தனது உணர்வை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டார்.

அப்துல் முனிம் சொன்ன ஆறுதல் வார்த்தைகளால் தன்னை அறியாமல் ரெல்பேட்டின் கண்கள் கலங்கின. “அந்த நாளில் நடந்தவைகளுக்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன.;” எள்று கண்களில் கண்ணீர் நிரம்ப மன்னிப்புக் கேட்டார் ரெல்பேரட்.