ப்ரெக்ஸிட் விவகாரம்: பிரித்தானிய நாடாளுமன்றில் நடைபெறவிருந்த வாக்கெடுப்பு பிற்போடப்பட்டது!

Tuesday, December 11th, 2018

ப்ரெக்ஸிட் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் நடைபெறவிருந்த வாக்கெடுப்பு பிற்போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய பிரதமர் தெரேசா மேய் இதனை நேற்று அறிவித்தார்.பிரித்தானிய௲ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம் தொடர்ந்தும் இழுபறியில் உள்ளது.

இதற்காக பிரதமர் தெரேசா மேயினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிர்ப்புகள் உள்ளன.

குறிப்பாக வட அயர்லாந்து உடனான எல்லை குறித்த பிணக்கு தீர்க்கப்படாதிருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் குறித்த யோசனை மீதான வாக்கெடுப்பு நேற்று இடம்பெறவிருந்த போதும், இறுதி நேரத்தில் இந்த வாக்கெடுப்பு கைவிடப்பட்டது.

குறித்த வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தால், ப்ரெக்ஸிட் தொடர்பான யோசனைக்கு பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் எதிராக வாக்களித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

தற்போது குறித்த யோசனை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடன் அவர் மீளாய்வு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: