போலியோ நோய் நிலைமையால் நியூயோர்கில் அவசர காலநிலை!

போலியோ நோய் நிலைமை காரணமாக நியூயோர்கில் அவசர காலநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கழிவுநீர் மாதிரிகளில் போலியோ வைரஸ் கலந்திருந்ததால் அவசர காலநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், போலியோவுக்கு எதிரான தடுப்பூசியை அதிகரிக்க அதிகாரிகள் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கிப்படுகிறது.
போலியோ பரவலைக் கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என நியூயோர்க் அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும், ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒருவர், போலியோ வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாராயின், அவர் செயலூக்கி தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது
000
Related posts:
சச்சின் தெண்டுல்கரை அகற்ற மாநகராட்சி உத்தரவு!
போலி கல்விச் சான்றிதழுடன் விரிவுரையாளர் பதவி? - யாழ் பல்கலைக்கழகத்தில் முறைகேடு என தகவல்!
வடக்கில் 639 பாடசாலைகள் இன்று ஆரம்பம் – கல்வி நடவடிக்கை மீண்டும் ஆரம்பித்துள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாக...
|
|